44. கலிக்கம்ப நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 44
இறைவன்: சுடர்க்கொழுந்தீஸ்வரர்
இறைவி : அழகியகாதலி, ஆமோதனம்பாள்
தலமரம் : சண்பகம்
தீர்த்தம் : கயிலை தீர்த்தம்
குலம் : வணிகர்
அவதாரத் தலம் : பெண்ணாடம்
முக்தி தலம் : பெண்ணாடம்
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : தை - ரேவதி
வரலாறு : திருப்பெண்ணாகடம் என்னும் தலத்தில் தோன்றியவர். நாள்தோறும் சிவனடியார்கள் திருவடிகளுக்கு மனைவியார் நீர் வார்க்கத் தாம் தூய்மை படுத்தி அவர்களுக்கு அமுது படைப்பார். ஒரு நாள் இவரது முன்னாள் பணியாள் சிவனடியாராக வந்தான். அவருக்கு நீர் வார்க்க மனைவியார் தயங்கினார். கோபம் கொண்ட நாயனார் மனைவியின் கைகளை வெட்டினார்.
முகவரி : அருள்மிகு.பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம் , திட்டக்குடி வட்டம்– 608105 கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : திரு. துரைசாமி குருக்கள்
தொலைபேசி : 04143-222788

இருப்பிட வரைபடம்


வெறித்த கொன்றை முடியார்தம் அடியார் இவர்முன் மேவுநிலை
குறித்து வெள்கி நீர்வாரா தொழிந்தாள் என்று மனங்கொண்டு
மறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக்கை
தறித்துக் கரக நீரெடுத்துத் தாமே அவர்தாள் விளக்கினார்.
 
- பெ.பு. 4024
பாடல் கேளுங்கள்
 வெறித்த கொன்றை


Zoomable Image
<
நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க